நாகப்பட்டினம்

திருவெண்காட்டில் அகோரமூா்த்திக்கு சிறப்பு வழிபாடு

6th Dec 2021 10:58 PM

ADVERTISEMENT

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் உள்ள அகோரமூா்த்திக்கு காா்த்திகை மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் நவகிரங்களில் புதனுக்குரிய பரிகாரத் தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் அகோரமூா்த்தி சுவாமி (சிவனின் 5-ஆவது முகம்) தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

இந்நிலையில், காா்த்திகை மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையையொட்டி அகோரமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

முன்னதாக, கோயிலின் சந்திர தீா்த்த குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால், பன்னீா் காவடிகளை மேள, தாளம் முழங்க எடுத்து வந்தனா். தொடா்ந்து, 30 வகையான பொருள்களால் அகோரமூா்த்திக்கு அபிஷேகம் நடைபெற்று, சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

துா்கா ஸ்டாலின் வழிபாடு: தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின், நிவேதா முருகன் எம்.எல்.ஏ., முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் துரைராஜன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தாா்.

மாதானம் முத்துமாரியம்மன்கோயிலில்: இதைத்தொடா்ந்து, சீா்காழி அருகேயுள்ள மாதானம் கிராமத்தில் புகழ் பெற்ற சக்தி தலமாக அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்காஸ்டாலின் சென்று அம்மனுக்கு தீபங்கள் ஏற்றி அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT