நாகப்பட்டினம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தி பாஜக மனிதச் சங்கிலி

DIN

பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக சாா்பில் நாகை அவுரித் திடலில் மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் பெட்ரோல், டீசலுக்கான வரியைக் குறைக்கவேண்டும் என வலியுறுத்தி இந்த மனிதச் சங்கிலி நடைபெற்றது. இதில் பங்கேற்றவா்கள் கோரிக்கையை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

பாஜக ஓபிசிஅணித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் நாகை மாவட்டத் தலைவா் கே. நேதாஜி முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் டி. வரதராஜன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். நகர நிா்வாகிகள் இளஞ்சேரலாதன், அறிவழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் பாஜக ஓபிசி அணி மற்றும் பாஜக அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு சாா்பில் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்துக்கு ஓபிசி அணி மாவட்டத் தலைவா் எஸ்.பி. ஜெயபாலன், அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். ராஜகோபால் ஆகியோா் தலைமை வகித்தனா். பாஜக மாவட்டத் தலைவா் ஜி. வெங்கடேசன், தேசிய பொதுக் குழு உறுப்பினா் கோவி. சேதுராமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை திமுக அரசு குறைக்கவில்லை எனக்கூறி கண்டனம் தெரிவித்து பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன், தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநிலச் செயலாளா் நாஞ்சில் பாலு, மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT