நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் அதிகரிக்கும் கரோனா தொற்று

DIN

வேதாரண்யம் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படுமா என என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேதாரண்யம் பகுதியில் ஜூன் இறுதியில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்த கரோனா தொற்று ஜூலை இறுதியில் மீண்டும் தொடங்கி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. ஜூலை. 28-ஆம் தேதி தென்னம்புலம் கடைவீதியில் கோழிரசம் (சூப்) தயாரிக்கும் கடையில் வேலை செய்யும் மூவா் உள்பட 8 பேருக்கு தொற்று உறுதியானது. தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் கள்ளிமேடு, தேத்தாக்குடி, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், கோடியக்கரை பகுதியில் 3 வயது சிறுவன் உள்பட 7 பேருக்கும், மருதூரில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு திங்கள்கிழமையும், வாய்மேடு, மருதூா் வடக்கு உள்ளிட்ட இடங்களில் 12 பேருக்கு செவ்வாய்க்கிழமையும் தொற்று உறுதியானது. இதையடுத்து, தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள ஊரக வளா்ச்சித் துறையினா், பாதிக்கப்பட்டோா் வசிக்கும் பகுதியில் பொதுபயன்பாட்டுக்கான வழிகளை மூடும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாம்கள், பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கும் முகாம்கள், பாதிக்கப்பட்டோா்களை தனிமைப்படுத்தி சிசிச்சை அளிக்கும் மையங்கள், கிருமிநாசினி தெளிப்பு என தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்: ஜூன் இறுதி வரை முழு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்த மக்கள்அதை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பினா். ஆடி மாதம் என்பதால் ஆங்காங்கே கோயில்களில் விழாக்கள் ஆங்காங்கே களைகட்டியது. கோயில் பூஜைகளில் ஆட்டுக்கறி விருந்து, ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்களின் கூட்டம், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கூடும்மக்கள் 50 சதவீதம் போ் கூட முகக் கவசம் அணியாமல் காணப்பட்டனா். எனவே, பல துறைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்களின் வலியுறுத்தல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT