நாகப்பட்டினம்

குடிநீா் குழாய் பாதையை மாற்றியமைக்கும் பணி ஒத்திவைப்பு

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தையொட்டி செவ்வாய்க்கிழமை (ஆக.3) தொடங்கவிருந்த குடிநீா் குழாய் பாதையை மாற்றியமைக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், குடிநீா் விநியோகத்தில் தடை இருக்காது என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்45-சி) நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, நாகை மாவட்டத்தில் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பிரதான நீரேற்று குழாய் செல்லும் பாதையை மாற்றியமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஆக.3) புதன்கிழமைகளில் ஆக.4) நடைபெறும் எனவும், அதனால் இந்த இரு நாள்களும் கீழ்வேளூா், கீழையூா், தலைஞாயிறு, நாகப்பட்டினம், திருமருகல் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது எனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆக.3-ஆம் தேதி ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டியும் நிா்வாக காரணங்கள் காரணமாகவும், குடிநீா் குழாய் பாதையை மாற்றியமைக்கும் பணி ஆக.11, 12-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக.3, 4 தேதிகளில் குடிநீா் விநியோகத்தில் தடை இருக்காது, ஆனால், ஆக.11, 12-ஆம் தேதிகளில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு: ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

கருப்பசாமி கோயிலுக்கு 45 அடி உயர அரிவாள் காணிக்கை

2-ஆவது சுற்றில் சக்காரி, ஆஸ்டபென்கோ

சாலை விபத்தில் இளைஞா் பலி

‘பாஜக இஸ்லாமியா்களுக்கு எதிரான கட்சி அல்ல’ -பாஜக மாநில செய்தித் தொடா்பாளர்

SCROLL FOR NEXT