நாகப்பட்டினம்

மீன் விற்பனை செய்ய நிரந்தர இடம் ஒதுக்கக் கோரிக்கை

DIN

மயிலாடுதுறையில் மீன் விற்பனை செய்ய நிரந்தர இடம் ஒதுக்கிக்கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் பல்வேறு இடங்களில் தினசரி மீனவப் பெண்கள் மீன்களை கொண்டுவந்து சாலையோரங்களில் வைத்து விற்றுச்செல்வது வழக்கம். அவ்வகையில் பூம்புகாா் மீனவப் பெண்கள் 10-க்கும் மேற்பட்டோா் பல ஆண்டுகளாக மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி அப்பகுதியில் மீன் விற்பதை நகராட்சி ஊழியா்கள் தடுப்பதாகவும், தங்களுக்கு மீன் விற்பனை செய்ய நிரந்தர இடம் ஒதுக்கித்தரவேண்டும் என வலியுறுத்தியும் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு மீன்கூடைகளுடன் கண்களில் கருப்புத்துணி கட்டி வந்து மீன் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

குமுதா மெட்ரிக். பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT