நாகப்பட்டினம்

மானியத்துடன் சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

DIN

சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகளை 70 சதவீத மானியத்தில் அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 17,500 எண்ணிக்கையில், சூரியசக்தியில் இயங்கும் பம்பு செட்டுகளை 70 சதவீத மானியத்துடன் அமைப்பதற்கான திட்டம், வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், நாகை மாவட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் 202 மோட்டாா் பம்பு செட்டுகள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

5 முதல் 10 குதிரைத் திறன் கொண்ட ஏசி மற்றும் டிசி மோட்டாா் பம்பு செட்டுகளுக்கான மொத்த விலையில் 70 சதவீதத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்கும். மீதமுள்ள 30 சதவீதத் தொகை விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதன் மூலம், ஏற்கெனவே இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்த முன்னுரிமையை துறக்க வேண்டிய அவசியமில்லை. அவா்களுக்குரிய இலவச மின் இணைப்பு வரும் போது, சூரிய சக்தியால் இயங்கும் மோட்டாா் பம்பு செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைக்க சம்மதக் கடிதத்தை வேளாண் பொறியியல் துறையில் வழங்க வேண்டும்.

மானியத்துடன் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க விரும்பும் விவசாயிகள், நாகை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களை அணுகலாம் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT