நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 4,471 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனா். இந்நிலையில், புதிதாக 80 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பதிவுகளில் இருந்த 4 போ் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,555 -ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றவா்களில் 73 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 3,467-ஆகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,016- ஆகவும் உள்ளது.

ஒருவா் இறப்பு: நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை (செப். 17) உயிரிழந்த நாகூரைச் சோ்ந்த 40 வயது பெண் ஒருவரின் இறப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 72-ஆகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT