நாகப்பட்டினம்

ஓராண்டுக்குப் பிறகு பயன்பாட்டுக்கு வந்த எரிவாயு தகனமேடை

DIN

வேதாரண்யத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட எரிவாயு தகனமேடையை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

வேதாரண்யத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் இருந்தது. இதில், சடலங்களை எரியூட்ட யாரும் முன்வராததால் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்பட்டுவந்த நிலையில், இதை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

வேதாரண்யம் யானைக்கட்டித் தெருவில் உயிரிழந்த தனலெட்சுமி (48) என்பவரது சடலம் கட்டணம் இல்லாமல் எரியூட்டப்பட்டது. இந்த எரிவாயு தகனமேடையை அனைத்து தரப்பினரும் பாகுபாடின்றி பயன்படுத்த முன்வர வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் ஆா். கிரதரன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பையன், வழக்குரைஞா் நமச்சிவாயம், ஊராட்சி முன்னாள் தலைவா்கள் சிவகுரு.பாண்டியன், எஸ்.ஏ. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT