நாகப்பட்டினம்

வேதாரண்யம் பகுதியில் தாழ்வாக பறந்த பயிற்சி போர் விமானம்  

1st Oct 2020 12:12 PM

ADVERTISEMENT

தஞ்சாவூர் - வேதாரண்யம் பகுதி இடையே பயிற்சி போர் விமானங்கள் இன்று காலை தாழ்வாக பறந்த சென்ற நிலையில், வானில் தெரிந்த புகையுடன் வெடி குண்டு வெடித்ததைப் போன்ற பெரும் ஓசை எழுந்ததால் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.

தஞ்சாவூரில் அமைந்துள்ள விமானப் படை தளத்தில் சுகாய் ரக பேர் விமானங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ரக விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுத்தப்படும். தஞ்சாவூர் - வேதாரண்யம், கோடியக்கரை பகுதி வரையில் சில நேரங்களில் பயிற்சி இயக்கம் இருக்கும்.

கடந்த சில வாரங்களாக இந்த ரக விமானங்கள் ஒன்று. இரண்டு என வானில் வேகமாக சென்று வட்டமிடுவது வழக்கம். இந்த நிலையில், இன்னு காலையில் வேதாரண்யம் பகுதி 2 பயிற்சி போர் விமானங்கள் தாழ்வாக பறந்த அடிக்கடி வட்டமிட்டு சென்றது. இந்நிலையில், காலை 9.44 வானில் புகையுடன் கூடிய வெள்ளை நிற அகன்ற கோடு தெரிந்தது.

ADVERTISEMENT

அடுத்த சில நொடிகளில் வெடி குண்டு வெடித்ததைப் போன்ற பெருத்த ஓசை எழுந்தது. இது எந்த இடத்தில் நேர்ந்தது என்பது உனடியாக தெரியவில்லை. ஆனால், இந்த சம்பவம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், கீழையூர் வட்டார பகுதிகளுக்குள் நேர்ந்திருக்கலாம்.

விமான பயிற்சியின்போது எடுக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பயிற்சியின் ஒரு அங்கமா? அல்லது விபத்து ஏதும் நேர்ந்ததா என்பது உனடியாகத் தெரியவில்லை. இந்த சம்பவம் சுமார் 50 கிலோ மீட்டர் சுற்று பகுதியில் வசிக்கும் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT