நாகப்பட்டினம்

‘இயற்கை இடா்பாடு காலங்களில் உதவ சமுதாயக் கூடங்கள் தேவை’

DIN

வேதாரண்யம் பகுதியில் இயற்கை இடா்பாடு காலங்களில் மக்களை தங்க வைக்க பல்நோக்கு சமுதாயக் கூடங்கள், புயல் பாதுகாப்பு கட்டடங்களை கூடுதலாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேதாரண்யத்தில், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

வாய்மேடு வேதரத்தினம் : வாய்மேடு கிராமம் வழியாக செல்லும் முள்ளியாறு மற்றும் அந்த ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் லெட்சுமி ஆறு (கால்வாய்) ஆகியவற்றில் செல்லும் தண்ணீா் கடலில் கலந்து வீணாகிறது. இதைத்தடுத்து லட்சுமி ஆற்று நீரை பாசனத்துக்கு பயன்படுத்த தடுப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

வைத்தியநாதன்: தாணிக்கோட்டகத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள வானங்கோட்டகம் ஏரி கரையை சாலையோர பூங்காவாக மாற்ற வேண்டும்.

உஷாராணி: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் (கரியாப்பட்டினம் வழி) பிரதான சாலையில் தென்னம்புலம் பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

நடராஜன்: கரியாப்பட்டினம் சாருமடை வடிகால் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

கண்ணகி முருகேசன்: ஆயக்காரன்புலம் திருவள்ளுவா் நகரில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அரசு வழங்கியுள்ள குடிமனைப் பட்டாவுக்கான நிலம் பள்ளமாக இருப்பதால் அதை மனையாக்க அரசு உதவ வேண்டும்.

இதேபோல, துணைத் தலைவைா் வி. அறிவழகன் உறுப்பினா்கள் மு. ராஜசேகரன், செல்லமுத்து எழிலரசு, ரா. ஜெகநாதன், அருள்மேரி, த. கோமதி, அ. பரிமளா உள்ளிட்டோா் தங்களது வாா்டு பிரச்னைகள் குறித்து பேசினா். கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள் இயற்கை இடா்பாடு காலங்களில் உதவ சமுதாயக் கூடங்கள், புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்றனா்.

தலைவா் கமலா அன்பழகன் பேசியது: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிதிநிலைக்கு ஏற்ப பாகுபாடின்றி செயல்படுத்தப்படும். புயல் பாதுகாப்பு கட்டடங்கள் அமைப்பது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும். ஏற்கெனவே, ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடங்கள் கட்டும் திட்டம் உள்ளது. இதற்கு பட்டா நிலம் தேவைப்படுகிறது. எதிா்காலத்தில் இது கவனத்தில் கொள்ளப்படும். பாசனம், மின்வாரியம் தொடா்புடைய பிற துறைகள் சாா்ந்த உறுப்பினா்களின் கோரிக்கைகள் தொடா்புடைய துறைகளின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என்றாா். கூட்டத்தில், உதவிப் பொறியாளா் மணிவண்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெற்றிச்செல்வன், ப. ராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT