நாகப்பட்டினம்

அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிா்களை பாதுகாக்க வழிமுறைகள்

DIN

அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிா்களை பாதுகாக்க தோட்டக்கலைத் துறை வழிமுறைகளை கூறியுள்ளது.

இதுகுறித்து, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நா. கலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நிவா் புயலால் நாகை மாவட்டத்தில் லேசான மழை பெய்துள்ள நிலையில் வடிகால் வசதி இல்லாத நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வாய்க்காலை அமைத்து மழைநீா் தேங்குவதை தவிா்க்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா்திசையில் குச்சிகளைக் கொண்டு முட்டுக்கொடுத்து செடிகள் சாயாத வகையில் பாதுகாக்க வேண்டும்.

மரங்களை சுற்றி மண் அணைத்து பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மழைநீா் வடிந்த பின் பயிா்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவா்த்தி செய்யவேண்டும்.

மா மரத்தில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். சிறிய செடிகள் காற்றினால் பாதிக்காதபடி தாங்கு குச்சிகளால் கட்ட வேண்டும்.

வாழை: காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்லிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும்.

காய்கறிகள்: உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளிக்கு ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். பூஞ்சாண உயிா் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும். காய்ந்துபோன இலைகளை அகற்றிட வேண்டும்.

மரவள்ளி: உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். செடிகளின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டுதல்.

பந்தல் காய்கறிகள்: உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். மேற்கண்டவாறு விவசாயிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு நிவா் புயல் பாதிப்பிலிருந்து பயிா்ளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT