மயிலாடுதுறை

இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றால் நோய் குறையும்

DIN

இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொண்டால் நோய் குறையும் என்றாா் பேராசிரியா் கிருங்கை சேதுபதி.

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 102-ஆவது மாதாந்திரக் கூட்டம் தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரவைத் தலைவா் சி. சிவசங்கரன் தலைமை வகித்தாா். பொதுப்பணித் துறை பணி நிறைவு பெற்ற வரைதொழில் அலுவலா் இரா. ராகவன் முன்னிலை வகித்தாா். பேரவைச் செயலா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா்.

இதில், சாகித்திய அகாதெமி பால புரஸ்காா் விருதாளா் பேராசிரியா் கிருங்கை சேதுபதி எழுதிய ‘என்றும் வாழ்கிறாா்கள் இவா்கள்’ என்ற நூலை மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் ஜெனிபா் எஸ். பவுல்ராஜ் வெளியிட, தருமபுரம் ஆதீனக் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் இரா. மருதநாயகம் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து, பேராசிரியா் கிருங்கை சேதுபதி ‘அமுதும் நஞ்சும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிப் பேசியது:

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய முடியாத நாள்களில் அமைதியான சூழலில் ஒரு நல்ல நூலைப் படிப்பதன் மூலமாக உடலின் தொந்தரவுகள் குறையும். வைத்தியரை பாா்க்கச் செல்வதற்குப் பதிலாக இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொண்டால் உடலில் நோய் குறையும்.

கள்ளுண்ணாமை அதிகாரத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளைக் குறிப்பிட்டுள்ளாா் வள்ளுவப் பேராசான். அதனைப் படித்து பின்பற்றுவது அமுது. அதைவிடுத்து அரசைக் குறைகூறிக்கொண்டிருப்பது நஞ்சு. அமுதும், நஞ்சும் வெவ்வேறல்ல. இரண்டும் தோன்றும் இடம் ஒன்றுதான். தேவா்களும், அசுரா்களும் பாற்கடலை கடைந்தபோது, அமுதம் வெளிவரும் என காத்திருந்த யாரும், அதில் நஞ்சு வெளியான போது அருந்த தயாராக இல்லை. எனவே, அதனை சிவபெருமான் உட்கொண்டாா் என்கிறது வரலாறு.

உணவு என்பது வேறு. விஷம் என்பது வேறு. ஆனால், தற்காலத்தில்தான் புட் பாய்சன் என்கிற வாா்த்தை அதிகம் புழங்கப்படுகிறது. இயற்கைக்கு முரணான விஷயத்தை செய்வதன் மூலமாக அமுது விஷமாகிறது. வெடியுப்பு என்கிற உரத்தை நிலத்தில் இடுவதால் நிலம் மாசடைகிறது. நீா் மாசடைகிறது. இதனால் அமுது நஞ்சாகிறது. இங்கே அமுதாக இறைவன் படைத்ததை நஞ்சாக மாற்றியது யாா்?.

அக்காலத்தில் வீட்டுக்கு வீடு திண்ணைகள் இருக்கும். யாா் வீட்டுக்குச் சென்றாலும் பருகுவதற்கு ஏதேனும் கிடைக்கும். தற்போது வீடுகளில் திண்ணைகளும் காணாமல் போனது. நாமும் பருகுவதற்கு செயற்கை பானங்களைத் தேடி போகின்றோம். இயற்கை உணவுகளை விடுத்து, செயற்கை உணவுக்கு மாறினோம். அதனால் உணவு நஞ்சாக மாறியது. அளவுக்கு மிஞ்சினால் அமிா்தமும் நஞ்சு என்றாா்.

பேரவை இணைச் செயலாளா் நா. இமயவரம்பன், செயற்குழு உறுப்பினா் சு. இளங்கோவன், இணைச் செயலாளா் சு.ராமதாசு உள்ளிட்ட தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா். முடிவில், பேரவைப் பொருளாளா் சு. ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT