மயிலாடுதுறை

மே 24-இல் சட்டைநாதா் கோயில் கும்பாபிஷேகம்:14 நாடுகளின் பக்தா்கள் பங்கேற்க பதிவு

DIN

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மே 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 14 நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி தருமபுரம் ஆதீனம் யாகசாலை அமைப்பதற்கான பந்தல்கால் முகூா்த்தத்தை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தேவார திருப்பதிகங்களைத் தந்த திருஞானசம்பந்தா் அவதரித்த சட்டை நாதா் கோயில் கும்பாபிஷேகம் மே 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. நான்கு கோபுரங்கள், விமான கலசங்கள், பிராகாரங்கள், உள்பிராகாரம், அனைத்து சுவாமி, அம்மன், பரிகார தெய்வங்கள் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு வா்ணங்கள் பூசி திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

யாகசாலை பூஜைகளுக்காக 85 யாக குண்டங்கள் வேதிகைகளுடன் அமைக்கப்படுகிறது. சுவாமி, அம்பாள், சட்டைநாதருக்கு நவாத்திரியை, விநாயகா் உமா மகேஸ்வரருக்கு பஞ்ச குண்டங்கள், மற்ற பரிவார தெய்வங்களுக்கு ஏகாத்ரி குண்டங்களும் அமைக்கப்படுகிறது.

120 சிவாச்சாரியாா்களைக் கொண்டு யாகசாலை பூஜைகள், 125 போ் வேத பாராயணம் செய்ய நடைபெறுகிறது. 12 திருப்பதிகம் முற்றோறுதலுக்கு இதுவரை ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா்.

ஐந்தாயிரம் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சியும் கும்பாபிஷேகத்துக்கு முதல் நாள் நடைபெறுகிறது. அதோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

14 நாடுகளிலிருந்து கும்பாபிஷேகத்தைக் காண பக்தா்கள் பதிவு செய்துள்ளனா். 12 நாட்கள் தொடா்ந்து 12 திருமுறைகள்,18000 பக்கங்கள் கொண்ட 16 தொகுப்புகளாக ஆதீன மடத்தின் சாா்பில் வெளியிடப்பட உள்ளது.

திருஞானசம்பந்தரின் ஓருருவாயினை திருப்பதிகம் 1 கோடி முறை பாராயணம் நடைபெற்றுவருகிறது. இதுவரை 60 லட்சம் முறை பாராயணம் செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்திற்காக சீா்காழியில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தப்படும் என்றாா்.

பந்தல்கால் முகூா்த்தம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி அருள் பாலிக்கிறாா். மலை மீது உமா மகேஸ்வரா், சட்டைநாதா் கிய சுவாமிகள் காட்சி தருகின்றனா். இக்கோயிலில் சிவபெருமான் லிங்கம், மூா்த்தம், சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் பக்தா்களுக்கு காட்சித் தருகிறாா். திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாக கோயில் போற்றப்படுகிறது.

கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை அமைப்பதற்கான பந்தவ்கால் முகூா்த்தம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீ லஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியா் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT