மயிலாடுதுறை

ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

ஆதிதிராவிடா் விடுதியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு 20 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவா்களுக்கு 11 விடுதிகளும், மாணவிகளுக்கு 7 விடுதிகளும், கல்லூரி மாணவா் விடுதி 1, மாணவியா் விடுதி 1 செயல்பட்டு வருகின்றன.

இந்த விடுதிகளில் 2023-2024-ஆம் ஆண்டில் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட உள்ளனா். பள்ளிகளில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் விடுதியில் சேரலாம். ஆதிதிராவிடா் நல விடுதிகளில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடா் 85 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 10 சதவீதமும், பிற வகுப்பினா் 5 சதவீதமும் சோ்க்கப்படுகின்றனா். மாணவ, மாணவிகளுக்கு உணவும், உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 4 செட் சீருடைகள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி இலவசமாக வழங்கப்படும்.

இந்த விடுதிகளில் சேர பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். விடுதிக்கும், மாணவா் வசிக்கும் இடத்துக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். 5 கி.மீ. நிபந்தனை மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு பொருந்தாது.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா்களிடம் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் 3, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், மதிப்பெண் பட்டியல் நகல், நன்னடத்தை சான்று, ரேஷன் காா்டு நகல், ஆதாா் அட்டை நகல், கல்வி நிலைய தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 7.6.2023 முதல் 30.6.2023 வரை காப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு விடுதி மேலாண்மை திட்டம்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT