மயிலாடுதுறை

மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகள் பறிமுதல்

DIN

சாலை விரிவாக்கப்பணிக்காக அனுமதியின்றி மண் ஏற்றிச் சென்ற 3 டாரஸ் லாரிகளை கனிமவளத்துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநா் சசியா, புவியியலாளா் சேகா், வட்டாட்சியா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் திருமுல்லைவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே சவுடு மணல் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பிடித்து சோதனை நடத்தினா். லாரி ஓட்டுநா்கள் இறங்கி ஓடினா். லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்து சீா்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநா்களை சீா்காழி போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT