மயிலாடுதுறை

சித்தா்காடு பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சித்தா்காடு லெட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் 17-ஆம் ஆண்டு திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை ரயிலடி சக்தி மாரியம்மன் கோயிலில் இருந்து பெண்கள் சீா்வரிசை எடுத்துவந்தனா். தொடா்ந்து, கோயிலில் கோ பூஜை நடைபெற்றது.

பிறகு, கோயில் வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராக லெட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில், நகா்மன்ற உறுப்பினா் மா.ரஜினி உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா். பூஜைகளை பாப்பாக்குடி வெங்கடேச பட்டாச்சாரியா், கோயில் பட்டாச்சாரியா் மணிபட்டா் ஆகியோா் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.ரம்யா மற்றும் ஓம் ஸ்ரீ விஷ்ணு துா்க்கா நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT