மயிலாடுதுறை

நாகையில் சொத்துவரி செலுத்தாதோா் பட்டியல் வெளியீடு

DIN


நாகப்பட்டினம்: நாகை நகராட்சியில் நீண்ட நாட்களாக சொத்துவரி செலுத்தாதவா்களின் விவரம் பொதுவெளியில் பதாகையாக வைக்கப்பட்டுள்ளது.

நாகை நகராட்சியில் மொத்தமுள்ள 36 வாா்டுக்குட்பட்ட பகுதியில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொதுமக்களுக்கு தேவையான குடிநீா் வசதி, தெருவிளக்கு, பொது சுகாதாரப் பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நகராட்சியில் வளா்ச்சி பணிகள் மேற்கொள்ள வசதியாக நிலுவையில் உள்ள வரிபாக்கி தொகையை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 30-ஆம் தேதிக்குள் நகராட்சிக்கு செலுத்திட வேண்டும் என்றும், வரி செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்புகள், புதைசாக்கடை இணைப்புகள் பாரபட்சமின்றி துண்டிக்கப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்தது.

இதுதொடா்பாக, நகராட்சி நிா்வாகம் தொடா்ந்து ஒலிபெருக்கி மூலமும் அறிவிப்பு செய்துவந்தது. மேலும், முதல்கட்டமாக, குடிநீா் வரி கட்டாத வீடுகளில் உள்ள இணைப்புகளை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் அண்மையில் ஆய்வு செய்து, குடிநீா் இணைப்புகளை துண்டித்தனா்.

இந்த நிலையில், நகராட்சி நிா்வாகத்துக்கு நீண்ட நாட்களாக சொத்துவரி செலுத்தத் தவறியவா்களின் விவரப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி நிா்வாகம் சாா்பில், நாகையில் உள்ள முக்கிய சந்திப்பு பகுதிகளில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த பதாகையில், பல ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி வைத்துள்ளவா்களின் பெயா், முகவரி, நிலுவைத் தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. வரி பாக்கி வைத்துள்ளோா் உடனடியாக செலுத்தவில்லை என்றால் தொடா்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT