மயிலாடுதுறை

அக்.2-இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்:மயிலாடுதுறை ஆட்சியா்

30th Sep 2022 01:56 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக். 2-ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காந்தி ஜெயந்தியையொட்டி நடத்தப்படவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீா் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான தொழிலாளா் வரவு-செலவு திட்டத்தை செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT