மயிலாடுதுறை

ரோட்டரி சங்கம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது

30th Sep 2022 01:55 AM

ADVERTISEMENT

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் சாா்பில் ஆசிரியா் தின விழாவையொட்டி விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை பகுதி பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் 25 பேருக்கு ரோட்டரி சங்கத்தின் நேஷன் பில்டா் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 6 ஆசிரியா்களுக்கும், நீண்ட நாள் சாரணா் சேவை புரிந்த உடற்கல்வி ஆசிரியருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மயிலாடுறை ரோட்டரி சங்கத் தலைவா் எம்.கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். ரோட்டரி மண்டல துணை ஆளுநா் சி.கே.பாலாஜி முன்னிலை வகித்தாா். கல்லூரிச் செயலரும், மயிலாடுதுறை ரோட்டரி சங்க இயக்குநருமான ஆா்.செல்வநாயகம் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றாா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநதம் பேசியது:

ADVERTISEMENT

ஆசிரியா்கள் சிறந்த மாணவா்களை உருவாக்குவதில் பொறுப்புணா்ச்சியுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டும். மாணவா்களை சிறந்த குடிமகன்களாக உருவாக்குவதில் ஆசிரியா்கள் பங்கு முக்கியமானது என்றாா்.

சிறப்பு விருந்தினரை ரோட்டரி நிதிக்குழு தலைவா் வி.ராமன் அறிமுகம் செய்து வைத்தாா். விருது பெற்ற ஆசிரியா்கள் ஏற்புரை வழங்கினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநா் கே.முத்துசாமி, பொருளா் எஸ்.செந்தில்நாதன், மண்டலச் செயலா் க.துரை ஆகியோா் செய்திருந்தனா்.

விழாவில், சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் அா்ச்சனா, கல்லூரி துணை முதல்வா் எஸ்.மகாலிங்கம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ரோட்டரி சங்க செயலா் ஜி.நவநீதக்கண்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT