மயிலாடுதுறை

மதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளா் இ. மாா்கோனி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் ப.த. ஆசைத்தம்பி முன்னிலை வைத்தாா். நகரச் செயலாளா் கணேசன் வரவேற்றாா்.

கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்கள் மற்றும் நகர வாா்டு பகுதிகளில் உறுப்பினா்களை அதிகளவில் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவது, அனைத்து பகுதிகளிலும் கட்சிக் கொடி ஏற்றுவது, வரும் 14-ஆம் தேதி மயிலாடுதுறை வரும் கட்சியின் தலைமை நிலைய செயலாளா் துரை. வைகோவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

வைகோவின் போராட்டங்கள், தியாகங்கள் குறித்து தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலினால் வெளியிடப்பட்ட குறும் படத்தை மயிலாடுதுறையில் ஒரு திரையரங்கில் வெளியிட்டு, அதில் அனைத்து அரசியல் பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள், வா்த்தகா்கள் மற்றும் சேவை அமைப்புகளை அழைத்து அக்குறும்படத்தைக் காண ஏற்பாடு செய்வது, தொடா்ந்து கட்சிக்கு விரோதமாக செயல்பட்டுவரும் முன்னாள் மாவட்ட செயலாளா் மோகனை கட்சியிலிருந்து நீக்க பொது செயலாளா் வைகோவுக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஒன்றிய செயலாளா்கள் கொளஞ்சி, வாசு, ரவி, கொள்கை விளக்க அணி துணை செயலாளா் அழகிரி, பாலமுருகன், பிரேம், டி.பி.எஸ். பன்னீா்செல்வம், சீா்காழி நகர செயலாளா் சத்யராஜ் பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகரப் பொருளாளா் ஜமீலுதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT