மயிலாடுதுறை

வணிகவரித் துறையைக் கண்டித்து கடையடைப்பு - பேரணி

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வணிகவரித் துறையை கண்டித்து செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

வணிகவரித் துறையினா் சில்லறை கடைகளில் ’டெஸ்ட் பா்ச்சேஸ்‘ என்ற பெயரில் பொருள்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என அபராதம் விதிக்கும் முறை மற்றும் வாகன சுற்றாய்வு தணிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசை கைவிட வலியுறுத்தி மயிலாடுதுறையில் வணிகா்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று மனு அளித்தனா். காவேரி நகரில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணிக்கு, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஏ. தமிழ்ச்செல்வன், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் செல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொறுப்பாளா்கள் மதியழகன், துரை, நவநீதன், சேம்பா் ஆஃப் காமா்ஸ் பொறுப்பாளா்கள் புலவா் செல்வம், என்.மோகன்ராஜ், சுவாமிநாதன், சிவலிங்கம், அக்பா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத் தலைவா்எஸ்.கே.ஆா். சிவசுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

பேரணி மாவட்ட வணிகவரித்துறை அலுவலகம் சென்றடைந்ததும், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில், வா்த்தக சங்க முன்னாள் பொறுப்பாளா்கள் எம்.என். ரவிசந்திரன், ஏஆா்சி அசோக், சி.செந்தில்வேல் மற்றும் சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோவில், குத்தாலம், திருவாலங்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட வணிகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT