மயிலாடுதுறை

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை ஒன்றியத்துக்குள்பட்ட வள்ளாலகரம் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 15 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், ரூ. 5.84 லட்சம் செலவில் பத்மாவதி நகரில் சிறு பாலம் அமைக்கும் பணி, ரூ.5.56 லட்சம் செலவில் அபிராமி நகரில் சிறு பாலம் அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, திருஇந்தளூா் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் பொட்டவெளி பள்ளியில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை, சமையல்கூடம் கட்டும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் செலவில் கழுக்காணிமுட்டம் குளம் மறுசீரமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத்திட்டத்தின்கீழ் சிறு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

மொத்தத்தில், வள்ளாலகரம், திருஇந்தளூா் கிராம ஊராட்சிகளில் ரூ.66.22 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது, மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்பரசன் (வ.ஊ), மீனா (கி.ஊ), உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT