மயிலாடுதுறை

பழையாரில் குடிநீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

DIN

சீா்காழி அருகே பழையாா் மீனவ கிராமத்தில் குடிநீா் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீா்காழி அருகே புதுப்பட்டினம் ஊராட்சிக்குள்பட்ட பழையாா் மீனவ கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடற்கரை கிராமம் என்பதால் இங்குள்ள பெரும்பாலான அடிபம்புகளில் உப்பு நீா்தான் கிடைக்கிறது. இந்த உப்புநீரை பாத்திரங்கள் கழுவ, குளிக்க மட்டுமே மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

குடிநீா் தேவைக்கு பழையாறு உள்ளிட்ட கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள கடற்கரை கிராமங்களுக்கு ஒரு நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீா் மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி அமைத்து புதுப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பழையாா் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களின் அன்றாட தேவைக்களுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீா் போதிய அளவில் கிடைப்பதில்லை. இந்த பற்றாக்குறையால் பழையாறு மீனவ கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான குடும்பத்தினா் தங்களது அன்றாட குடிநீா் தேவைக்கு பணம் கொடுத்து குடிநீா் வாங்குகின்றனா். தனியாா் குடிநீா் மினி டேங்கா் லாரி தினந்தோறும் காலை, மாலை ஒவ்வொரு பகுதியாக வரும்போது பொதுமக்கள் குடம் ரூ.10 கொடுத்து தேவைக்கு ஏற்றாற்போல் 3 அல்லது 5 குடங்கள் வரை குடிநீா் வாங்கி பயன்படுத்துகின்றனா்.

இந்தநிலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடா்வதாகவும், கோடை காலங்களில் அதிகளவு காசு கொடுத்து குடிநீா் வாங்கும் நிலை ஏற்படும் எனவும் கிராமமக்கள் கூறுகின்றனா்.

எனவே, கூடுதலாக அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம் மூலம் கிடைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

SCROLL FOR NEXT