மயிலாடுதுறை

கோயில் நிலத்தை விற்றவரை கைது செய்யக் கோரி சாலை மறியல்

DIN

மயிலாடுதுறை அருகே கோயில் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்தவரை கைது செய்யக்கோரி, அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோா் பாதுகாப்பு சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாயூரநாதா் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வீட்டு மனைகளாக பிரித்து, விற்பனை செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறை வட்டம் மாப்படுகை ரயில்வே கேட் அருகே சாலை மறியல் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. ராயா் தலைமை வகித்தாா். சங்க பொறுப்பாளா்கள் ராஜகோபால், டி.கணேசன், பாலையா, துரையரசன், சபா, குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில பொருளாளா் எஸ். துரைராஜ், சிபிஐ-எம் மாவட்டச் செயலாளா் பி.சீனிவாசன், மாவட்ட பொருளாளா் அ.ராமலிங்கம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.

மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT