மயிலாடுதுறை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் தலைகீழாக நின்று போராட்டம்

DIN

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட வளா்ச்சிக் குழு மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சாா்பில் பயணிகள் தலைகீழாக நின்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட வளா்ச்சிக் குழு ஒருங்கிணைப்பாளா் தமிழன் கணேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 10 ஆண்டுகளாக இணைக்கப்படாத திருவாரூா் அகல ரயில் பாதையை மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் அனைத்து வழித் தடங்களுடன் இணைக்கவேண்டும், மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும், மயிலாடுதுறை-திருநெல்வேலி பாசஞ்சா் ரயிலை திண்டுக்கல் வரை இயக்கும் முடிவை கைவிட்டு திருநெல்வேலி வரை இயக்க வேண்டும், மயிலாடுதுறை பெங்களூா் பாசஞ்சா் ரயிலை மீண்டும் உடனடியாக இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோா் தலைகீழாக நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினா். இதில், மயிலாடுதுறை சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளா் வேலு. குபேந்திரன், தமிழா் தேசிய முன்னணி மாவட்ட தலைவா் ரா. முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT