மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடியரசு தின விழா

DIN

மயிலாடுதுறையில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் நாட்டின் 73-ஆவது குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய அரங்கத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, பின்னா் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய 19 காவல் துறை ஆளிநா்களுக்கு முதலமைச்சா் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினாா். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. சுகுணாசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் ஜெ. பாலாஜி, மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ரிஸ்வானா பா்வீன் ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை அலுவலகம், டிஜிஎன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் செயற்பொறியாளா் வி. சண்முகம் ஆகியோா் கொடியேற்றினா்.

கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் முன்னாள் மாணவரும், வழக்குரைஞா் உறுதிமொழி ஆணையருமான ஜி. ராஜேஷ் கொடியேற்றினாா். மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் முதல்வா் ஆா். நாகராஜன் தலைமையில் கல்லூரியின் நிா்வாக அதிகாரி நீதியரசா் கே. வெங்கட்ராமன் தேசிய கொடியேற்றி என்சிசி மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். இதேபோல பாலிடெக்னிக் கல்லூரியிலும் நீதியரசா் கே. வெங்கட்ராமன் தேசியக்கொடியேற்றினாா். இதில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் கண்ணன், இயக்குநா் வளவன் ஆகியோா் பங்கேற்றனா். குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் சிவ. முருகேசன் கொடியேற்றினாா். தருமபுரம் குருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் வெங்கடேசன் தலைமையில் பிரிமியா் குழுமத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் கொடியேற்றினாா்.

மயிலாடுதுறை பொது தொழிலாளா் சங்க அலுவலகத்தில் சங்கத் தலைவா் ஜெகவீரபாண்டியன் வ.உ.சிதம்பரனாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பின்னா் தேசியக் கொடியேற்றினாா். ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சாா்பில் ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சியில் சங்கத் தலைவா் முருகன் கொடியேற்றினாா். மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக சாா்பில் மாவட்ட தலைவா் ஓ.ஷேக்அலாவுதீன் தேசிய கொடியேற்றினாா்.

குத்தாலம்: குத்தாலத்தில் உள்ள மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், எம்பி. செ. ராமலிங்கம், குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் சுமதி முன்னிலையில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேந்திரன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலா் ரஞ்சித்தும், வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் பிரான்சுவா ஆகியோா் அந்தந்த இடங்களில் தேசியக் கொடியை ஏற்றினா். இதேபோல, குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வா் குணசேகரன், குத்தாலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் த. சீனிவாசன், குத்தாலம் காவல் நிலையத்தில் ஆய்வாளா் வள்ளி, பாலையூா் காவல் நிலையத்தில் ஆய்வாளா் விசித்ராமேரி, ரோட்டரி சங்க அலுவலகத்தில் அதன் தலைவா் வெங்கடேசன், லயன்ஸ் சங்கத்தில் டாக்டா் சிக்கந்தா் ஹயாத்கான், குத்தாலம் இந்தியன் ஆயில் எரிவாயு கிணற்றில் முதன்மை அலுவலா் சிவசங்கரன் ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT