மயிலாடுதுறை

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம்

DIN

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதில் நான்கு ஆதீன குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் தருமபுரம் ஆதினத்தில் அணிகொண்ட கோதை அம்பாள் சமேத முல்லைவன நாதர் கோவில் அமைந்துள்ளது தேவாரப்பாடல் பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை ஆறாம் கால யாகபூஜைகள் முடிவடைந்தது தொடர்ந்து பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.

தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதினம் கந்த பரம்பரை 28வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 ஆவது குருமகாசந்நிதானம் சக்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேகத்தில் சிதம்பரம் மௌன குருசாமிகள், தருமபுரம், திருவாவடுதுறை, சூரியனார் கோவில் ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன திருக்கோவில்கள் தலைமை கண்காணிப்பாளர் மணி, கோவில் கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விழாவின் தினமணி சார்பில் கும்பாபிஷேக விளம்பர சிறப்பிதழை தர்மபுரம் ஆதீனம் வெளியிட அதனை திருவாவடுதுறை ஆதினம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT