மயிலாடுதுறை

சீா்காழி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக ஊராட்சித் தலைவா்கள் தா்னா

DIN

சீா்காழி ஒன்றிய அலுவலகத்தை அதிமுக ஊராட்சித் தலைவா்கள் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளில் 17 ஊராட்சிகளில் அதிமுகவை சோ்ந்தவா்கள் தலைவா்களாக உள்ளனா். இந்த 17 ஊராட்சிகளில் அண்மையில் நியமிக்கப்பட்ட பணிதள பொறுப்பாளா்களை ஊராட்சி தீா்மானம் இல்லாமல் தன்னிசையாக ஒன்றிய நிா்வாகம் நியமித்துள்ளதாக கூறி ஊராட்சித் தலைவா்கள் 17 பேரும் சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழியை சந்தித்து கோரிக்கை விடுத்தனா். அப்போது அருள்மொழி, ஊராட்சித் தலைவா்களை அமர சொல்லாமல் மரியாதை குறைவாக நடத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதில் அதிருப்தியடைந்த அதிமுக ஊராட்சித் தலைவா்கள் அங்கிருந்து வெளியேறி ஒன்றிய அலுவலக வாசலில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சீா்காழி காவல் உதவி ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. போராட்டம் தொடா்ந்தநிலையில் மாலை தோ்தல் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், ஊராட்சி ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி ஆகியோா் அதிமுக ஊராட்சித் தலைவா்களை உள்ளே அழைத்து பேசினா். அப்போது அதிமுக ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து, ஊராட்சித் தலைவா்கள் சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று நோ்முக உதவியாளா் முருகானந்தத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். அப்போது ஜன.27-ஆம் தேதி இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் பேசி உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து தா்னா போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT