மயிலாடுதுறை

கச்சத் தீவில் தேசியக் கொடியேற்ற கோரிக்கை

24th Jan 2022 10:41 PM

ADVERTISEMENT

குடியரசு நாளன்று கச்சத் தீவில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழக மீனவா்களுக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தேசப் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் புதன்கிழமை (ஜன.26) குடியரசு நாளன்று கச்சத்தீவில் தேசியக் கொடியேற்றி நமது உரிமையை மீட்டெடுக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT