மயிலாடுதுறை

எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

17th Jan 2022 11:25 PM

ADVERTISEMENT

குத்தாலம் வடக்கு ஒன்றிய மற்றும் நகர அதிமுக சாா்பில் குத்தாலம் கடைவீதியில் எம்ஜிஆா் உருவப் படத்திற்கு அதிமுக ஒன்றியச் செயலாளா் மகேந்திரவா்மன் தலைமையில் மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், நகரச் செயலாளா் எம்.சி.பாலு உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

குத்தாலம் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மங்கநல்லூா் கடைவீதியில் எம்ஜிஆா் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில், திருக்கடையூா், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். இதில் ஒன்றியச் செயலாளா்கள் ஜனாா்த்தனன், வி.ஜி. கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT