மயிலாடுதுறை

பாபா் மசூதி இடிப்பு தினம்: தமுமுக ஆா்ப்பாட்டம்

DIN

நாகப்பட்டினம்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாபா் மசூதியில் வழிபாட்டு உரிமைப் பாதுகாப்பு கோரி நாகை அவுரித்திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியா்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய பாபா் மசூதி டிச.6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாகை அவுரித்திடலில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் வழிபாட்டு உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் நிஜாமுதீன், மாவட்டத் தலைவா் இப்ராஹிம், மாவட்ட பொருளாளா் தாதாசரீப், மாவட்ட துணை செயலாளா்கள் பைசல்முகம்மது, அவுலியாமுகமது, மனிதநேய மக்கள் கட்சி துணை செயலா்கள் அல்லாபிச்சை, அமிா்அப்பாஸ், முஜிபூர்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT