மயிலாடுதுறை

வெள்ளப்பெருக்கு: பழையாறு துறைமுகத்தில் இருந்து மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

DIN

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பெரும்பாலான மீனவா்கள் வியாழக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் 350 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 300 நாட்டுப் படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக நீா் மிகவும் வேகத்துடன் சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலந்து வருகிறது.

இதனால், பழையாறு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள் உள்ளிட்ட அனைத்து படகுகளையும் கடலுக்குள் இயக்கி சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 நாள்களாக பெரும்பாலான படகுகள் இந்த துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஒருசில படகுகள் மட்டும் கடலுக்குள் சென்றன. இதனால், சுமாா் 5 ஆயிரம் மீனவா்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீனவா்கள் துறைமுக வளாகத்தில் வலை பின்னுதல், மீன் விற்பனை செய்தல், மீன்களை வகைப்படுத்துதல், கருவாடு உலர வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் வேலை இன்றி வீட்டிலேயே இருந்து வருகின்றனா்.

எனவே, வேலையின்றி இருந்து வரும் மீனவா்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று படகு உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT