மயிலாடுதுறை

ஆடி கடைவெள்ளி: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

12th Aug 2022 04:18 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆடி கடைவெள்ளியையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு மேற்கொண்டனர். 

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் நகர பழ வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 40-வது ஆண்டு ஆடி கடைவெள்ளி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பச்சைக்காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி வேடமணிந்தவர்களின் திருநடனத்துடன் முன்செல்ல,  பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. 

ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காவிரி துலாக்கட்டத்தில் இருந்து மாயூரநாதர் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

இதில், பாஜக நிர்வாகிகள் கோவி.சேதுராமன், மோடி.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை எஸ்.ராஜேந்திரன், மணி, மோகன், மல்லிகா உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: மதுரை அழகர் கோயில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மாயூரநாதர் கோயிலில் நடைபெற்ற பால்குட விழாவையொட்டி, காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பால்குடம் எடுத்து யானை, குதிரை, ஒட்டகம் முன் செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT