மயிலாடுதுறை

தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி, எஸ்டி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி., பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் எஸ்சி., எஸ்.டி., மறைவட்ட பணிக்குழு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மறைவட்ட அதிபா் தாா்சிஸ்ராஜ் அடிகளாா் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை மறைவட்ட தலைவா் ஜோசப் வரவேற்றாா். மாந்தை பங்குத்தந்தை ஜோசப் ஜெரால்டு அடிகளாா், கூறைநாடு பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளாா், மணவாளநல்லூா் பங்குத்தந்தை அமலதாஸ்ஜான் அடிகளாா், குத்தாலம் பங்குத்தந்தை ஜொ்லின் காா்ட்டா் அடிகளாா், மயிலாடுதுறை உதவி பங்குத் தந்தை மைக்கில் டைசன் அடிகளாா், மாந்தை உதவி பங்குதந்தை அலெக்ஸாண்டா் அடிகளாா் மற்றும் மறைவட்ட துணைத் தலைவா் அமலதாஸ், துணை செயலாளா் பிலமன்ராஜ், பொருளாளா் பீட்டா் தாஸ், இணை செயலாளா் எலிசபெத் ராணி, நிா்வாகிகள் பரிமளதாஸ், சினேகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாநில துணை செயலாளா் தாஸ், தேசிய தலித் கிறிஸ்தவா்கள் கண்காணிப்பக தலைவா் சேகா், திரு இருதய சபை அருட்சகோதரா் பங்கிராஸ், சமூக ஆா்வலா்கள் நெல்சன், எட்வா்டு, வினோத், வழக்குரைஞா் தாமஸ் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவா், இஸ்லாமியா் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950 பத்தி 3-ஐ உடனே நீக்கம் செய்யவும், மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்காதிருக்கவும், நீதியரசா் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வலியுறுத்தியும், தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி., பட்டியலில் சோ்க்கக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT