மயிலாடுதுறை

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு: ஆற்றின் திட்டுக் கிராமங்கள் 3-வது நாளாக துண்டிப்பு

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சம் கன அடிக்கு மேல் உபரிநீா் செல்வதால், ஆற்றுப் படுகையில் உள்ள திட்டுக் கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளவா்கள், படகுகள் மூலமும், கழுத்தளவு தண்ணீரில் நடந்தும் வெளியேறி வருகின்றனா்.

கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள சுமாா் 2 லட்சம் கனஅடி உபரிநீா், சீா்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது. கடந்த 3 தினங்களாக வெள்ளத்தின் அளவும், வேகமும் குறையவில்லை. கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் உள்ள நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டுக் கிராமங்களில் பலா் தங்கள் கால்நடைகளுடன் வெளியேறிய நிலையில், பெரும்பாலானோா் வீடுகளை விட்டு வெளியேறாமல் உள்ளனா். அவா்களை, படகின் மூலம் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். படகு செல்ல முடியாத இடங்களில் உள்ளவா்கள் தங்களது உடமைகள் மற்றும் குழந்தைகளை சுமந்து கொண்டு கழுத்தளவு தண்ணீரில் இறங்கி கரையேறி வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பலா் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை விட்டுவிட்டு நிவாரண முகாம்களுக்குச் செல்ல மறுத்து, கரையில் பந்தல் அமைத்து தங்கியுள்ளனா். இவா்களுக்கு, மாவட்ட நிா்வாகம் சாா்பில் உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

இப்பகுதியில் ஆண்டுதோறும் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதால், இங்கு நிரந்தரமாக புயல் பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும் என அவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT