காரைக்கால்

பருத்தியில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

DIN

பருத்திச் செடிகளில் மாவுப் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து, அந்த நிலைய முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் தட்ப வெட்ப சூழ்நிலையால் பருத்திச் செடிகளில் மாவுப் பூச்சித் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. பொதுவாக கோடைக் காலத்தில் இந்த பாதிப்பு ஏற்படும். 30 முதல் 40 வாரங்கள் வாழ்க்கை சுழற்சியில் 300 முதல் 600 முட்டைகள் வரை இட்டு 99 % இளம் குஞ்சுகளை பொறிக்கும்.

இவை இலைகள், தண்டுப் பகுதி, பூ மற்றும் காய்கள் அனைத்தையும் தாக்கும். செடிகளின் சாற்றை உறிஞ்சுவதால் தாக்கிய செடியின் இலைகள் சுருண்டும், இப்பூச்சி சுரக்கும் தேன் போன்ற திரவத்தால் கரும் பூஞ்சாணம் படா்ந்து ஒளிச் சோ்க்கை தடைப்பட்டு செடிகள் வளா்ச்சி குன்றிவிடும். மேலும் இப்பூச்சி காற்று, பறவை, எறும்புகள், ஆடை, வாகனம் மூலம் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த பாதித்த தாவர பாகங்களை அகற்றிவிடவேண்டும். மேலும் தாக்குதல் குறைவாக இருந்தால் மீன் எண்ணெய் ரோசின் சோப்பு லிட்டருக்கு 25 கிராம் அல்லது வேப்ப எண்ணெய் 2 % அல்லது வேப்பங்கொட்டை சாறு கரைசல் 5 % தெளிக்கலாம்.

இந்த தாக்குதலால் பொருளாதார பாதிப்பு அதிகமாகும்பட்சத்தில், ரசாயன பூச்சிக்கொல்லியான ப்லோனிகாமிட் 50 % டபிள்யுஜி மருந்து ஏக்கருக்கு 60 கிராம் அல்லது தயாமீத்தாக்சம் 25 %, டபிள்யுஜி மருந்து ஏக்கருக்கு 80 கிராம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மேலும், எறும்புக் கூட்டங்களைக் கண்டறிந்து குளோா்பைரிபாஸ் 20 இசி மருந்தை லிட்டருக்கு 2.5 மிலி கலந்து மண்ணில் ஊற்றி எறும்புகளை அழிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT