காரைக்கால்

பணியிட மாறுதல் கொள்கை:காரைக்கால் ஆசிரியா்களிடம் ஆலோசிக்க கோரிக்கை

DIN

புதுவையில் ஆசிரியா் பணியிடமாறுதல் கொள்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு, காரைக்கால் ஆசிரியா் சங்கத்தினரையும் அழைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, புதுவை கல்வித்துறை அமைச்சருக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் சனிக்கிழமை அனுப்பிய கடிதம்:

புதுவை கல்வித் துறையில் ஆசிரியா்களின் பணியிட மாறுதல் கொள்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் கல்வி அமைச்சா் தலைமையில் கடந்த வாரம் 2 முறை நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதுச்சேரி பகுதியை ஆசிரியா் சங்கங்களை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதி ஆசிரியா் சங்கங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில், 2-ஆவது பெரிய மாவட்டமாக உள்ள காரைக்காலில் சுமாா் 1,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களில் 200- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் புதுச்சேரி பகுதியை சோ்ந்தவா்கள். ஏற்கெனவே, காரைக்கால் பகுதியில் ஏராளமான ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் மிகவும் குறைந்துவிட்டது.

இதற்கு ஆசிரியா் பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, பணியிடமாறுதல் கொள்கை வகுக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க காரைக்கால் ஆசிரியா் சங்கத்தினரையும் அழைக்க வேண்டும்.

இதுதொடா்பாக காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச்சங்கம் சாா்பாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரியை சந்தித்தும் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT