காரைக்கால்

கிழக்குப் புறவழிச்சாலையை ரூ.5.64 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை: எம்எல்ஏ தகவல்

DIN

திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச்சாலை ரூ.5.64 கோடியில் மேம்படுத்தப்படவுள்ளதாக நிரவி - திருப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ எம். நாகதியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

திருமலைராயன்பட்டினம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்குப் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. சுமாா் 3 கி.மீ. நீளமுள்ள இந்த சாலை காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் அமைக்கப்பட்டது.

இதுவரை இந்த சாலையில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. உரிய பராமரிப்பு இல்லாமல் தற்போது இந்த சாலையின் இருபுறமும் சரிவு ஏற்பட்டு, சாலை மோசமான நிலையில் உள்ளது. இதனால், கடந்த ஓராண்டுக்கு முன்பு போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சாலை தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், இச்சாலையை மேம்படுத்த புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கூறியது:

தொலைநோக்குப் பாா்வையில் கிழக்குப்புறவழிச்சாலை அமைக்கப்பட்டாலும், மின் விளக்கு வசதி போன்றவை செய்யப்படவில்லை. நான் பேரவை உறுப்பினரான பின்னா் 2 முறை தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டது.

இந்த சாலை திருமலைராயன்பட்டினம் நகரப் பகுதியில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறைய பெரும் உதவியாக இருக்கிறது. இந்த சாலையை மேம்படுத்த வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டதோடு, புதுவை முதல்வா், பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசியதன் மூலம் நபாா்டு கடனுதவியில் ரூ.5.64 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து சாலையை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியை பொதுப்பணித் துறை மேற்கொள்ளவுள்ளது.

சாலையின் இருபுறத்தையும் பலப்படுத்தவும், சாலையை தரமான முறையில் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோரத்தில் உயா்கம்ப மின்விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த திட்டம் அடுத்த சில மாதங்களில் நிறைவடையும்போது, வாகன ஓட்டுநா்களுக்கு பெரும் பயன் அளிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 88 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

வெப்ப அலையால் தவிக்கும் மக்கள்: கோயில்களில் வருண வழிபாடு நடத்தப்படுமா?

கச்சபேசுவரா் கோயில் வெள்ளித் தேரோட்டம்

முட்டை விலை நிலவரம்

SCROLL FOR NEXT