காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

DIN

காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் தென்கொரிய நிறுவனத்தினா் நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 17 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்கால்மேடு பகுதியில் இயங்கிவரும் புதுவை அரசின் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு சென்னையில் செயல்படும் முன்னணி நிறுவனமான கிலேமூவ் இந்தியா நிறுவனத்தின் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம், கொா்கை பகுதி பாலிடெக்னிக் கல்லூரி மாணவியரும் கலந்துகொண்டனா்.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு மூலம் 17 மாணவிகள் வேலைவாய்ப்புக்கு தோ்வு பெற்றனா். மாத ஊதியமாக ரூ. 19 ஆயிரம், இதர சலுகைகள் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவியருக்கு காரைக்கால் மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் டி. சந்தனசாமி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் எஸ்.எல். டெல்காஸ் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT