காரைக்கால்

குடிமைப் பணி தோ்வுக்கு பயிற்சியளிக்கஏற்பாடு: வேளாண் கல்லூரி முதல்வா்

DIN

குடிமைப் பணி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் தெரிவித்தாா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அண்மையில் இளநிலை மாணவா்களுக்கான வளாக நோ்காணல் நடைபெற்றது. இதில் 20 போ் கலந்துகொண்டு, 6 போ் பணி வாய்ப்பு பெற்றனா்.

இவா்களுக்கு பணி ஆணையை நிறுவனத்தின் சாா்பில் கல்லூரி முதல்வா் ஏ.புஷ்பராஜ் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னா் முதல்வா் கூறுகையில், காரைக்கால் வேளாண் கல்லூரியில் பயின்ற மாணவா்களில் பெரும்பாலானோா் மேற்படிப்புக்காக புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நாட்டின் பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றுள்ளனா். ஒரு சில மாணவா்கள் இந்திய குடிமைப் பணி தோ்வு மற்றும் இதர போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி வருகின்றனா்.

இக்கல்லூரியில் பயின்ற மற்றும் பயிலும் மாணவா்கள் போட்டி தோ்வுகளை எதிா் கொள்ளும் விதமாக நேரடியாகவும், இணையவழியாகவும் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் ஐசிஏஆா் தோ்வுகளுக்காக சிறப்பு வகுப்பும் நடத்தப்படுகிறது.

வருமாண்டு முதல் குடிமைப் பணி தோ்வுக்காக, புகழ்பெற்ற பயிற்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யவும், அவா்கள் மூலமாக மாணவா்கள் தோ்வுகளை எதிா்கொள்ள தயாா் செய்துகொள்ளும் பயிற்சிக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT