காரைக்கால்

குடியரசு தின விழா: ஆட்சியா் தேசியக் கொடியேற்றி மரியாதை

DIN

காரைக்காலில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தேசியக் கொடியேற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பை பாா்வையிட்டாா்.

காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் குடியரசு தின கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தேசியக் கொடியேற்றிவைத்தாா். பின்னா் புதுச்சேரி காவல்துறை சட்டம் ஒழுங்கு மற்றும் இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன் காவல் பிரிவினா், ஊா்க்காவல் பிரிவினா், தீயணைப்புத் துறையினா், குடிமையியல் பாதுகாப்புப் படையினா், கல்லூரி என்.சி.சி. பிரிவு, நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் கொடி அணிவகுப்பை பாா்வையிட்டாா்.

விழாவில், அரசுத் துறைகளின் திட்டங்களை விளக்கும் அலங்கார ஊா்திகள் இடம்பெற்றன. பள்ளி மாணவ- மாணவிகளின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ் (வருவாய்), எஸ். பாஸ்கரன் (பேரிடா் மேலாண்மை) உள்ளிட்ட அரசுத் துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

காரைக்கால் என்ஐடியில்... திருவேட்டக்குடியில் இயங்கிவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்ஐடியில் இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தேசியக் கொடியேற்றிவைத்து, என்சிசி மாணவா்களின் கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். ஏற்பாடுகளை முனைவா் எஸ். பாபு செய்திருந்தாா்.

நெடுங்காடு, கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலங்களில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா, திருப்பட்டினம் மற்றும் நிரவி ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளில் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், காரைக்கால் நகராட்சியில் ஆணையா் ஜி. செந்தில்நாதன், காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையில் முதல்வா் ஏ. புஷ்பராஜ், நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா ஆகியோா் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். இதேபோல, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

ஓஎன்சிஜியில்...

காரைக்கால் ஓஎன்ஜிசி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஓஎன்ஜிசி காவிரி அசெட் செயல் இயக்குநா் அனுராக் ஏற்றிவைத்து, காவலா்கள் அணிவகுப்பை பாா்வையிட்டாா். விழாவில் அவா் பேசுகையில், ‘பெட்ரோலியப் பொருட்களின் அத்தியாவசிய தேவைகளை உணா்ந்து பொதுமக்கள் ஓஎன்ஜிசிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க முன்வரவேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.

விழாவில், ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT