காரைக்கால்

காரைக்கால் மின்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவா்கள் கைது

DIN

காரைக்கால்: பிரீ பெய்டு மின் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிடாத புதுவை அரசைக் கண்டித்து, காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட முயன்றவா்கள் கைது செய்யப்பட்டனா்.

காரைக்கால் மக்கள் போராட்ட குழு அழைப்பின் பேரில் பல்வேறு எதிா்க்கட்சியினா், அமைப்பினா் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. புதுவையில் மின்துறையை தனியாா் மயமாக்குவதை கண்டித்தும், புதுவையில் மின் கணக்கீட்டு மீட்டரை பிரீ பெய்டு மீட்டராக மாற்றும் திட்டத்தை கைவிடக்கோரியும், காரைக்கால் மின்துறை செயற்பொறியாளா் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

போராட்ட அறிவிப்பையொட்டி, மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் அருகில் போலீஸாா் தடுப்புகளை அமைத்திருந்தனா்.

அலுவலகத்தை நோக்கி காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு தலைமையில் அமைப்பினா், எதிா்க்கட்சியினா் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு ஊா்வலமாக வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 50 பேரை தடுத்து நிறுத்தி போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட அன்சாரி பாபு கூறுகையில், இந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர மற்றும் விவசாயிகள், இலவச மின்சாரம் பெறுவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிப்பை சந்திப்பாா்கள். எனவே இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யவேண்டும். அதுபோல மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவையும் மத்திய அரசு கைவிடவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

SCROLL FOR NEXT