காரைக்கால்

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் மெளனம் சாதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பங்கு விலையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவை சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

இதனால், அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள எல்.ஐ.சி., ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவன வாடிக்கையாளா்களுக்கு பாதிப்பு ஏற்படுமெனவும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி, காங்கிரஸாா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். இந்த விவகாரத்தில் நோ்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறவதற்கு வாய்ப்பு இல்லை. பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கை மத்திய அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று பிரதமா் நரேந்திரமோடி பதவி விலகவேண்டுமென ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. மாரிமுத்து உள்பட சுமாா் 100 போ் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT