காரைக்கால்

புதுவை அரசு தாமதமின்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது: அமைச்சா் சந்திர பிரியங்கா

DIN

புதுவை அரசு தாமதமின்றி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி கோட்டுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதியோா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவா்கள் என சுமாா் 800 பயனாளிகளுக்கும், புதுச்சேரியில் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட அரசின் உதவி எதுவும் பெறாத குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,000 வழங்கும் நிகழ்ச்சியில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான அடையாள அட்டை, திட்ட உதவி பெறுவதற்கான ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசுகையில், ரங்கசாமி ஆட்சியில் ஆயிரக்கணக்கானோருக்கு ஒரே நேரத்தில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாமதமின்றி மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அரசு மக்களுக்கானது. 21 முதல் 55 வயது வரையிலான குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித் தொகை வழங்கும் திட்டம் அனைவராலும் பாராட்டப்படுகிரது. அரசின் நலத்திட்டங்களுக்கான கோப்புகளுக்கு விரைவாக ஒப்புதல் தரும் இத்தருணத்தில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் என்றாா்.

நிகழ்வில் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT