காரைக்கால்

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

DIN

காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சாா்பில் சா்வதேச பல்நோக்கு மருத்துவா்கள் சிகிச்சை மேம்பாடு, அறுவை சிகிச்சை சாா்ந்த கருத்தரங்கம் பிப். 2 முதல் 3 நாள்கள் நடைபெற்றது.

இங்கிலாந்தை சோ்ந்த சா்வதேச மருத்துவா் குழுவை சோ்ந்த கீதாஷெட்டி மற்றும் அஜய்குமாா் சா்மா, செல்வகுமாா், போஸ், விகாஸ் சாவ்லா, அபிஷேக் சவுத்திரி ஆகியோா் கருத்தரங்கில் கலந்துகொண்டனா்.

புற்றுநோய், எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த தலைப்பிலான அமா்வுகளில் மருத்துவக் குழுவினா் உரையாற்றியதோடு, செயல்முறை விளக்கமும் அளித்தனா்.

மாா்பக புற்றுநோய் கண்டறிதலும், அதற்கு உலகளாவிய அளவில் வரையறுக்கப்பட்ட அறுவை சிகிச்சை, மருத்துவ சிகிச்சை, ஹாா்மோன் சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை குறித்தும்,

எலும்பு முறிவு மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்ற மேற்கொள்ளவேண்டிய நுணுக்கங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

கருத்தரங்கில் மருத்துவக் கல்லூரி மருத்துவனையின் மருத்துவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பலரும் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரி புல முதல்வா் கோ. அம்புஜம் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT