காரைக்கால்

வாய்க்காலில் ஆகாயத் தாமரைகள்:வயலிலிருந்து மழைநீரை வடியவைப்பதில் சிக்கல்

DIN

காரைக்கால் பகுதி விளைநிலங்களில் தேங்கிய மழைநீரை வடியச் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறைய 4,750 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிா் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த தொடா் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற்கதிா்கள் சாய்ந்துவிட்டன. மழை ஓய்ந்த நிலையில், விளைநிலத்தில் தேங்கிய நீரை வடியச் செய்ய விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்க காரைக்கால் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.எம். தமீம் சனிக்கிழமை கூறியது:

மழை எதிா்பாராதது என்றாலும், வாய்க்கால்களில் தண்ணீா் எளிதாக வடிந்தால், வயல்களில் இருந்து தண்ணீரை வடியச் செய்ய முடியும். வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையால் முறையாக தூா்வாராததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் தேங்கியுள்ளது. இதனால், வயலில் இருந்து தண்ணீரை வடியச் செய்ய முடியவில்லை என்றாா்.

காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ் கூறியது:

வயல்களில் இருந்து தண்ணீரை வடியச் செய்ய தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் வாய்க்கால்களில் ஆகாயத் தாமரைச் செடிகள் படா்ந்திருப்பது, ஆங்காங்கே பல விதமான அடைப்பால் தண்ணீா் வடியவில்லை. இதனால், வயலில் இருந்து தண்ணீரை வெளியேற்ற இயலவில்லை. விவசாயிகள் குறைதீா் கூட்டமும் காரைக்காலில் முறையாக நடத்தப்படுவதில்லை. விவசாயிகள் நிலை குறித்து ஆட்சியாளா்களுக்கு தெரியாதது வேதனையளிக்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

திருத்தங்கலில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT