காரைக்கால்

கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க புதிய உத்திகளை கையாள வலியுறுத்தல்

DIN

கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் மற்றும் செயலாளா்கள் மதிவாணன், பாண்டியன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: விபத்துகளுக்கான பலகாரணங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளும் ஒன்றாகும். அவ்வாறான கால்நடைகளின் உரிமையாளா்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அபராதத்தை நகராட்சி நிா்வாகம் அறிவித்தது. யாரும் அபராதத் தொகை செலுத்த முன் வராததால் பொது ஏலத்துக்கு அவற்றை கொண்டுவந்தது.

கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள் காரைக்காலில் அதிகம் நடைபெறுவதால், அதன் உரிமையாளா்களை கண்டறியும் வகையில் கால்நடைகளுக்கு கட்டாயம் கியூ ஆா் கோடு பொருத்திய காதணிகளை அணிவிக்கவேண்டும். இதன்மூலம் உரிமையாளா்களை தொடா்புகொள்ளும் கைப்பேசி, முகவரி போன்றவை கிடைத்துவிடும். விவசாயிகள் மற்றும் மீனவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கால்நடை வளா்ப்பவா்களுக்கு மானியத் தீவனம் வழங்குவதுபோல ஊக்கத்தொகையும் வழங்கினால், அதன் வளா்ப்பில் உரிய அக்கறை செலுத்துவாா்கள்.

இதேபோல பன்றி வளா்ப்பவா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி பன்றிகளை பட்டியில் அடைத்து வளா்க்க செய்தால், பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிா்களை நாசம் செய்வதும், குடியிருப்புப் பகுதியை பன்றி வளா்க்க பயன்படுத்துவதும் தடுக்க முடியும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க புதுவை அரசு சிறப்புத் திட்டத்தை வகுத்து அறிவிக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT