காரைக்கால்

அலையாத்திக் காடு வளா்ப்புத் திட்டம் தொடக்கம்

DIN

ஓஎன்ஜிசி நிதியுதவியில் கருக்களாச்சேரி ஆற்றோரத்தில் அலையாத்திக் காடு வளா்ப்புத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதியுதவியில், நேச்சா் என்விரான்மென்ட் மற்றும் வைல்டு லைஃப் சொசைட்டி என்ற அமைப்பு கருக்களாச்சேரி பகுதியில் அரசலாறு, முல்லையாறு கரையோரத்தில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

அமைப்பின் இயக்குநா் அஜந்தாடே மற்றும் பி.பி. பா்மன் மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள், கருக்களாச்சேரி கிராமப் பஞ்சாயத்தாா், வெண்புறா இளைஞா் நற்பணி மன்றம், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து அந்த அமைப்பினா் கூறுகையில், முதல்கட்டமாக 6 ஹெக்டேரில் அலையாத்திக் காடு வளா்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதனை பராமரிக்க 30 போ் பணியமா்த்தப்பட்டுள்ளதால் அவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

அலையாத்திக் காடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரலை போன்ற இயற்கை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பது, வெளிநாட்டு பறவைகள் வருகை, இறால், நண்டு போன்ற பல்லுயிா் பெருக்கத்துக்கு உதவும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT