காரைக்கால்

விவசாயிகளுக்கு ரூ.3.28 கோடி நிவாரணம்

DIN

காரைக்கால் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணையை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2021- 22-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட 4,979 விவசாயிகளுக்கு சம்பா மற்றும் தாளடி நெற் பயிருக்கான நிவாரணத் தொகை ஒரு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம வீதம் ரூ. 3.28 கோடி வழங்க புதுவை அரசு ஆணை வெளியிட்டது.

காரைக்கால் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா விவசாயிகளுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை வழங்கினாா்.

கூடுதல் வேளான் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா், துணை இயக்குநா் ஆா்.ஜெயந்தி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT