காரைக்கால்

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

DIN

காரைக்கால்: காரைக்காலில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் திட்டத்தை புதுவை சட்டப் பேரவைத் தலைவா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

புதுவை மாநிலத்தில் காசநோயாளிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஊட்டச்சத்துப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது. காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை காசநோய் சிகிச்சைப் பிரிவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் இத்திட்டத்தை புதன்கிழமை தொடங்கிவைத்து, ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் தொகுப்பை நோயாளிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்வில் புதுவை அமைச்சா் சந்திரபிரியங்கா, மருத்துவமனை கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, காசநோய் பிரிவு தலைமை மருத்துவா் வெங்கடேஷ், பாஜக மாநில துணைத் தலைவா் எம். அருள்முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

புதுவை மாநிலத்தில் காசநோயாளிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு மாற்றாக தற்போது ஓராண்டு திட்டத்தில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச் சத்துப் பொருள்களின் தொகுப்பு மாதந்தோறும் வழங்கப்படவுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் 44 போ் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும் என மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT